நான் தேடும் காதல் கவிதை
மனதில் தோன்றிய ஒவியமே கையில் வர மறுப்பது ஏனோ?
சிப்பியில் மறைந்த முத்தோ கடலில் புதைந்தது ஏனோ?
உன்னை தேடி எந்தன் பயணம் ........
உன்னை வரைய எண்ணும் ஒவியனும் நானோ
முத்துகுளிக்க எண்ணும் மீனவனும் நானோ.....
என் உயிரின் உதிரம் கொண்டு உன்னை வரைவேன்
உயிர்காற்றை அடக்கி அலை கடலின் ஆழம் தாண்டி உன்னை அடைவோன்
நீயோ நான் தேடும் கவிதை