நாளைய கடமை

தன்மானமில்லா தருக்கர்கள்
தமிழர்களே இல்லை!

ஒதுக்கித் தள்ளுங்கள்
தமிழ்ப் பண்பாடு
அறியாத காடையர்களை,
கொத்தடிமைகளாய் இருக்க
கூனிக் குறுகி நிற்போரை.

மாண்புமிக்கவரே
சட்டமன்றம் செல்லும்
தகுதி உள்ளவர்.

தவறாமல் வாக்களியுங்கள்
நல்லவராய் வல்லவராய்
மக்கள் சேவையில்
ஆர்வம் உள்ளவராய்
உள்ள வேட்பாளருக்கு.

எழுதியவர் : மலர் (15-May-16, 9:37 pm)
பார்வை : 488

மேலே