எட்டிப்பார்க்கிறது ~ சகா

அம்மாவின் மனத்தில்
மாமியார்
எட்டிப்பார்க்கிறாள்...

அக்காவின் மனத்தில்
நாத்தனார்
எட்டிப்பார்க்கிறாள்...

வந்தவள் மனத்தில்
மருமகள்
எட்டிப்பார்க்கிறாள்...

என் மனத்திலோ
கிலி
எட்டிப்பார்க்கிறது...

இரண்டு பக்கமும்
திறந்துவிட்டேன்
என் காதுகளின் வழியை...

ரகசியங்கள்
புதைக்கப்படுகின்றன..!!!
சத்தங்கள்
சங்கீதமாக்கப்படுகின்றன...!!!

மேடும் பள்ளமும்
மாறி வரும்
ரோலர் கோஸ்டர்
வாழ்க்கையில் நானோ...!!!???

எழுதியவர் : சகா (15-May-16, 11:54 pm)
பார்வை : 245

மேலே