49 O
பசி ராகம்
புல்லாங்குழல்
விறகு
~~~~~~~~~~~~~~~~~
யூ டு ப்ருட்டஸ்
இருக்கின்ற நாட்டில் தான்
குப்பிகளும் வாழ்கின்றன
~~~~~~~~~~~~~~~~~~
ஒரு நாள் கூத்து
தேர்தல்
முதல்நாள் கதாநாயகன்
பின் ஜோக்கர் தான் நாளும்
~~~~~~~~~~~~~~~~~~
இருவர்வாழும்
உலகில்
144 தடை உத்தரவு
** ஊடல்
~~~~~~~~~~~~~~~~~~
உயிரை திருடிவிட்ட
உயர்திரு 420 க்கு
அதிகபட்ச தண்டனையாக
காதலியின்
மன சிறையில்
ஆயுள் தண்டனை விதிக்கிறேன்
** திருமணம்
(களத்திர காரகர் )
~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில்
சீீதா
கவிதை சொன்னது
**மழலை
~~~~~~~~~~~~~~~~~~
சாலைகளில்
மரங்களுடன்
மனிதர்களும்
காட்சிபொருளாய்
** ?
நாகரீகம்
~~~~~~~~~~~~~~~~~~
இரயில் பயணம்
பல விசித்திர முகங்கள்
புரியாத முரண்கள்
புரிந்தது பயணம்
~~~~~~~~~~~~~~~~~~
வெங்காய வியாபாரிக்கு
புரிந்தது
வாழ்க்கை
~~~~~~~~~~~~~~~~~~
ஆடி மாசம்
கூழ்
கெடைக்காது
எல்லாருக்கும்
~~~~~~~~~~~~~~~~~~
வானத்ல மீனு
வலை வீச தான்
யாரும் இல்ல
~~~~~~~~~~~~~~~~~~
பேனா முனை
வேலை நிறுத்தம்
மை இன்றி
~ பிரபாவதி வீரமுத்து