தனிமையின் தனித்துவம்

தனிமை... ஆபத்தானது
அபாயமானது
ம்ம்...யார் சொன்னது??? தனிமை அழகானது.. ஆழமானது...அதற்கும் மேலாக தனிமை உண்மையானது.
ஒருவனின் வளர்ச்சி பாதைக்கு முழுவதுமாக வித்திடுவது.
தனிமை,
ஒருவனை தன்னைத் தானே உணர வைக்கும்.
அதிலும் இரவின் தனிமையை சொல்லிப்புரிவதில்லை .
வாழ்வில் முன்னேறிய பலரும்
இரவின் தனிமையை உணர்ந்தவர்கள்.
தனிமையில் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர்கள்.
ஒருவனின் நிறை, குறை, துக்கம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் தனிமை அறியும்.
உலகம் உறங்கும் வேளையில் நீ விழி ...
உன்னை நீயே செதுக்கிக்கொள் ..
அப்பொழுது நீ உலகம் போற்றும் அற்புத படைப்பாவாய்

எழுதியவர் : மு.முருகேஸ் (15-May-16, 11:05 pm)
பார்வை : 339

மேலே