சித் தீ
காலில் ஏற்பட்ட
காயத்தைக்
கண்டுகொள்ளாது
உடைந்து நொறுங்கிய
சிறு பூச்சாடிக்காக
ஓவென்று ஓலம்
வைத்தபடி
ஒன்றுமறியாத குழந்தை
செய்த தவறை
ஊதிப் பெரிது
படுத்த
தந்தையிடம்
ஓடிச்செல்கிறாள்
சித்தி ..
தண்டனைக்குப்
பயந்து சுவர்
ஓரமாக தயங்கி
நிற்கும் தன்
குழந்தையை
காப்பாற்ற
திராணியற்றுச்
சிரித்த
படியே சுவரில்
படமாகத்
தொங்கிக்
கொண்டிருக்கிறாள்
விபத்தொன்றில்
அக்குழந்தையை
அநாதரவாக
விட்டுச் சென்ற
தாய்..