தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 37 - = 106

“அன்பே நெஞ்சில் சோகம் சோகம்
நாம் காதலித்தது என்ன பாவம் ?”

“கண்ணே மணியே என காவியம் பாடும்
காதலில் பேதம் பார்ப்பது என்ன நியாயம் ?”

மோகத்தின் வாசல் திறந்து கிடக்க
காமத்தின் கதவை பூட்டலாமோ ?

இன்பத்தின் எல்லையை கடக்கின்றபோது
இடி மின்னல் தாக்கலாமோ ?

பனியில் சாய்ந்த மலர்கள் கூட
பரிதிப் பட்டால் எழுந்துவிடும் !

பஞ்சு மெத்தையில் புரளும் நேரம்
பூணுவதோ பரதேசி கோலம் ?

கண்ணகி வாழ்வில் எத்தனை சோகம்
காரணமெல்லாம் கால் சிலம்புதானே !

யோசனையில்லா பாண்டியன் தீர்ப்பு
அவன் அரசவைக்கே வைத்தது வேட்டு !

எந்தன் கையில் இரத்த வெள்ளம்
அதில் முத்தமிட்டது உந்தன் உள்ளம் !

முத்தமொன்றுதான் எந்தன் சொத்து
அதை அள்ளி தந்ததில் என்ன தப்பு ?

இரவு நேரம் மழை வந்தது
எனக்காக ஒரு ஜீவன் குடை பிடித்தது !

அந்த ஜீவன் நான்தானே
நடுநிசிவரை காத்திருந்தேனே !

என்ன செய்து என்ன புண்ணியம்
நமக்கு உறவுகள் வைத்தது பிரிவு சூனியம் !

அடுத்த ஜென்மம் எடுக்க வேண்டும்
அதிலாவது நாம் ஜெயிக்க வேண்டும் !

எழுதியவர் : சாய்மாறன் (16-May-16, 11:07 am)
பார்வை : 100

மேலே