கோடை மழை

சுட்டுக் சுழன்று
சுடர்வீசிக் கொண்டிருந்த வானம் !
பட்டென்று கருமை பூண்டு
களிக்கத் துவங்குகிறது !

கிளை நெருக்கத்தில்
வேயப்பட்டிருக்கும்
அந்த குட்டி நிழலுக்காகக்
கூட்டுப் புறாக்கள் போலக்
குழுமி இருந்த
காட்டுப் பருந்துகள்
கட்டவிழ்கின்றன !

வெப்பம் மிகுந்தண்டித்த அந்த
வேப்ப மரத்துக் கிளைஊஞ்சல்
வேகமான கற்றால்
விசிறப்படுகிறது !

வெற்றுக் காற்றின்
வெறுமைக் சத்தங்கள்
குயிலின் இசையால்
நிரப்பப் படுகின்றன !

கணினிப் பெட்டியே
கதியெனக் கிடந்த பிள்ளைகள்,
காற்றாடி ஓடியே
களைப்பான அறைகள்,

குளிர்சாதன அறையிலேயே
குடியிருந்த அப்பா,
தொலைகாட்சித் தொந்தரவைப்
பார்த்திருந்த பாட்டி,

சமையலறைச் சிறையில்
மாவறைத்த அம்மா,
என்று
அனைவரது நிம்மதியும்
ஒரு நிமிடம் தொலைய,
வந்திருந்த மின்வெட்டுடன்
வசந்தத்தையும் சேர்த்துக்
கொண்டே நுழைகிறது !
திடீரென்ற திருப்புமுனையாக வந்த
யாரும் எதிர்பாராத
இந்தக் கோடைமழை !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (16-May-16, 11:56 am)
பார்வை : 116

மேலே