காவடிச் சிந்து

ஈசற்கொ ருத்திஎம் அன்னையே - உன்றன்
இன்முகம் காட்டிடு முன்னையே - வந்து
இன்பத்தில் ஆழ்த்திடு என்னையே - பின்பு
.........நித்தம்கவிச் சத்தம்வரும்
.........பித்தென்மனம் முத்தம்பெரும்
இந்தப்பி றப்பினில் உன்னையே - எண்ணி
ஈட்டுகி றேன்கவி தன்னையே !

பேசற்கி னித்திடும் ஒண்மையே - உன்றன்
பேரருள் வேண்டுவம் உண்மையே - எம்மைப்
பேணிடும் தாயுன்றன் பெண்மையே - நின்றன்
.........மொட்டுப்பதம் தொட்டுத்தொழ
..........பட்டுத்துகில் கட்டித்தொழ
பேறவா கொள்ளுவம் உண்மையே - எம்மைப்
பேணுக பேணுக அன்னையே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (16-May-16, 8:53 am)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே