சேதாரம்

தங்க நகை
ஒன்று வாங்கினேன்
சேதாரத்திற்கும்
கணக்குப்பார்த்து
நகையின் விலையுடன்
கூட்டினார்கள்

சிரமம் வந்த போது
நகையை விற்றேன்
சேதாரத்திற்கும்
கணக்குப்பார்த்து
நகையின் விலையிலிருந்து
கழித்தார்கள்

வரும் போதும்
போகும் போதும்
நம் பொருளாதாரத்தை
சேதாரம் செய்த
இந்த சேதாரக் கணக்கை
கண்டுபிடித்த
ஆரியபட்டா யார்?

எழுதியவர் : மோகனதாஸ் (16-May-16, 3:44 pm)
பார்வை : 142

மேலே