ஒரு நிலைப்படுத்தும்
மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை உன்னதமானது
நிலைப்டுத்துவது சாமானியமல்ல
அது ஒரு வழிமுறை .
நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.
நொடித்துப் பார்ப்பவனை
மறந்தும் கருதாமல்.
வெடித்து விளம்புவனை
எவ்விதத்திலும் அறியாமல்
புறம் கூறுபவனை
ஒதுக்கி சகியாமல்
தன நோக்கிலே
குறியாகி வாழும் நோக்கு
மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.