தலைமைத் தொழிலுழவைத் தாங்கு - நேரிசை வெண்பாக்கள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழையதனால் – ஒப்பி
நிலைமாறி விற்காமல் நெல்வயலைக் காத்து
தலைமைத் தொழிலுழவைத் தாங்கு! 1

ஒப்பி:
1. To cause to agree - ஒத்துக்கொள்ளச்செய்தல்.
2. To deliver, surrender, hand over, make over - ஏற்கும்படி சேர்ப்பித்தல்.

உழவனவன் கைத்திறத்தால் ஊரிலுள்ள நன்செய்க்
கழனியாம் நெல்வயலைக் காத்துத் – தொழிலில்
பலன்பெற பாரினிலே பக்குவமாய்ப் பார்த்து
தலைமைத் தொழிலுழவைத் தாங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-16, 8:35 pm)
பார்வை : 312

மேலே