துங்கா

அடடா, குழந்தைகளுக்குப் பேரு வைக்கிறது இந்தப் பத்து இருபது


ஆண்டுகளா பெரிய பிரச்சனையாப் போச்சுங்க. . பிறமொழிப்


பேரா இருக்கணும். புதுமையான பேரா இருக்கணும். தமிழ்ப் பேரா

இருக்கக் கூடாது, இது தானுங்க நடைமுறை விதி. எம் பையன்


பிறந்து

பத்து நாள் ஆகுதுங்க. தொலைக்காட்சித் தொடர் ஒன்னுல வர்ற


வில்லன் கதாப்பாத்திரத்தின் பேரு 'துங்கா'. அந்தப் பேரை நான்


என் பையனுக்கு வைக்கலாம்னு இருந்தேனுங்க. அதுக்குள்ள எதிர்

வீட்டுக்காரன் மூணு நாளைக்கு முன்னாடி பொறந்த அவம்

பையனுக்கு அந்தப் பேரை வச்சுட்டானுங்க. நான் என்ன

செய்யறதுங்க.

அதே மாதிரி பேரை எம் பையனுக்கு வைக்க முடிவு

பண்ணீட்டனுங்க.எதிர் வீட்டுக்காரன் பையன் 'துங்கா'ன்னா எம்


பையன் 'நுங்கா'. 'நுங்கா' இந்திப் பேருன்னு சொன்னாப் போதும்


இந்திப் பெயர் மோகம் கொண்ட நம்ம தமிழ் மக்கள் 'ஸ்வீட் நேம்'னு

பாராட்டுவாங்களுங்க. 'நுங்கா' உண்மையிலே ஸ்வீட் நேம்

தானுங்க. நுங்கா சிந்தாபாத்துங்க.

எழுதியவர் : மலர் (19-Oct-24, 6:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

மேலே