தோல்வியே

இடர்பாடுகளின்
இடுக்குகளில்
உதிரம் சொட்ட சொட்ட
பெருவழி கடந்து
கரைபுரண்டோடும் வெள்ளத்தில்
உருண்டோடும் கருங்கல்லாய்
கரைவந்துக்கிடக்கிறேன்....

கடந்துவந்த பாதையெல்லாம்
சோகத்தின் கூற்றாட்டம்
செவியிரண்டை பழுதாக்க...

மையிட்ட பார்வையாலே
மயக்கிட்ட கண்மணியே-உன்னை
இருள் சூழ்ந்த இதயத்தில்
ஏற்றிவைத்தேன் விளக்காக...

வெளிக்காற்றில் உன்தேகம்
கருத்து போகுமென
மனதிற்குள் உன்னை
முத்து போல் காத்துவந்தேன்..
சிப்பிக்கே முத்து
சொந்தமில்லையென்று
சொல்லிவிட்டு போனவளே...

பிரிவொன்றும் பெரிதில்லை
நினைவை விட
நினைவுகள் தரும் வலியில்
சுகமாய் நடக்கிறேன்...

தோல்வியுடன் தோழமையாய்
தோள்சாய்ந்து கிடக்கிறேன்...
என்னவளே விட்டுவிட்டு
போனபின்னும்
என்னைவிட்டு
போகாத என்னுறவு!!!
தோல்வியே.....!!

எழுதியவர் : கருப்பசாமி (19-May-16, 8:38 am)
Tanglish : tholviye
பார்வை : 115

மேலே