பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகள் பக்கம் 02--முஹம்மத் ஸர்பான்

பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகள் பக்கம் 02--முஹம்மத் ஸர்பான்

அழகான தமிழ் கவிதைகளை
உனக்கு பரிசாக நீட்டினால்
எம் கண்கள் பரிமாற்றத்தில் கலங்கும்
அன்பையே பரிசாக கொட்டினால்
நீ காணும் பிறந்த தினங்களில் நானிருப்பேன்

காலம் கடினமானது என்பதை
யாரிடமும் நீ கற்க தேவையில்லை
உன் பிறப்பே உனக்கு ஞாபகமூட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தோளோடு தோளாய் சாயும் நண்பனும்
அன்பை வறுமையின்றி வழங்கும் தாயும்
வியர்வை சிந்தி மனிதனாக்கும் தந்தையும்
பொய்கள் சொல்ல வைத்த காதலியும்
கலப்பிடமில்லாத நேசம் வைத்த உடன் பிறப்பும்
அருகில் இருக்கும் போது பிறப்பின் நினைவும் அழகானது

வெற்றிகள் பெற்று உலகிற்கு உன்னையும்
தோல்விகள் கடந்து உனக்கு உன்னையும்
அறிமுகப்படுத்தி வைத்துக் கொள் என்றும்
உன் வாழ்வில் அவை தொடர்கதையாக!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனிதா!

பிறப்பு என்பது அழகான விபத்து
இறப்பு என்பது ஆபத்தான விபத்து
இரண்டுக்குமிடையில் சில நாள் வாழ்க்கை
இன்னுமொருமுறை
பிறக்கவும் இறக்கவும் அஞ்சாதே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-May-16, 2:38 pm)
பார்வை : 1457

மேலே