பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகள் பக்கம் 01 --முஹம்மத் ஸர்பான்

வருடத்தில் பல் வண்ணங்கள்
மலரும் விடியலில் பிறந்தாயோ
காற்றால் மலர்களை உதிர்த்து
மழைத்துளியில் வெண்பகலை அழைத்து
இதயத்தால் உன்னை வாழ்த்துகிறேன்
நிலவை கொண்டு வந்து உன்னிடம்
நான் தந்தாலும் அதன் பெறுமதி குறைவே!
உன்னை கட்டியனைத்து அன்பாய்
பேசும் வார்த்தைகள் பல்லாண்டு வாழச்செய்யும்
பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது
அதை மீண்டும் காலத்தின் நகர்வால்
அடையும் போது வாழ்த்துக்கள் அழகானது
ஆயிரம் தோல்விகள் கண்டாலும் மனதை
தளராமல் பத்திரமாய் காத்துக் கொள்!
நீ பிறக்கும் போது பத்து திங்கள் உன்
தாய் செய்த அன்பின் யுத்தத்தால் தான்
மண்ணில் பிறந்தாய் என்பதை மறவாதே!
இன்பமும் துன்பமும் நல்ல நண்பர்கள்
இன்பத்தை மட்டும் கண்ட மனிதனுமில்லை
துன்பத்தை மட்டும் கண்ட மனிதனுமில்லை
இரண்டும் நிச்சயம் உயிர்களுக்கு சொந்தம்
என்பதை மறவாதே! வாழ்க பல்லாண்டு