தூது சொல்லு-முஹம்மத் ஸர்பான்

கிரகங்கள் நம் சந்திப்பை
அந்த மழை இருளினிலா எழுதியது.
பிரயாணத்தினிலே ஒரு கணம்
எதிர்பாராது கண்ட கண்கள்
ஒரு நொடியாவது உன்னை
பார்க்காமல் இருக்கவில்லை.

பூக்களின் மகரந்தம் போல்
அவள் கைவிரல்களில்
பிரகாசிக்கும் மோதிரங்கள்.
என் மனதை சாய்த்த வண்ண
வண்ண வளையல்களின் நாதமும்,
என் பாதம் உரசிய உன்
சலங்கையின் முத்தும்;என் மேல்
காதல் கொண்டு பார்க்க வெட்கப்படும்
கயல் விழிகளும் என் மனதை
பேரழகியிடம் கொள்ளை கொடுத்தன.

எத்தனையோ ஏக்கங்கள்
மனதுக்குள் தோன்றினாலும்
நாம் இருவரும் வெட்கத்தால்
பேசிக் கொள்ள முடியவில்லை.
இருந்தும்
நீ என்னை பார்க்காத நேரமும்
நான் உன்னை பார்க்காத நேரமும்
ஆசையோடு பார்த்துக் கொண்டோம்.

விரைந்தோடும் ஊர்திக்குள்
எம் நெஞ்ச உணர்வுகள்
ஆமை போல் நடமாட அந்த
சிறு நேரச்சந்திப்பு எம் நெஞ்சில்
ஆறாத காயத்தை உண்டாக்கி விட்டது.

உன்னை கண்ட இருளில் நிலவு
தாலாட்டியது.ஆனால் பாசமான
காதலர்கள் சேரவில்லையென்று
நிலவு கூட என்னை தீயால் சுடுகிறது.

உன் உள்ளம் என்னிடம் எதை
எதிர்பார்க்கிறதோ தெரியாது.
என் உள்ளம் உன் பாசத்தை கேட்கிறது
என் கவிதைக்கு தூது சொல்லு அன்பே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-May-16, 7:24 am)
பார்வை : 163

மேலே