எட்டாம் சுரம்

                  எட்டாம் சுரம்

நின்று போன
மழையின் துளிகளாய்
சத்தமின்றி கிடக்கிறது
மௌனத்தின் வாசல்..

அருகருகே அமர்ந்திருந்தும்
வெகு நேரமாய்
நீண்ட வெளிகளில்
நமக்கான இடைவெளிகள்..

நீயென நானாகவும்
நாமென நீயாகவும்
வடிவாய் விடிகிறது
நமக்கான ஊடல்கள்..

அறிந்தும்
அறியாமலே
மனம் பதைபதைக்கிறது
நமக்கு நாமே ..

நம் காதலதுவும் இசையோடு
எட்டாவது சுரங்களாய்
இருந்துவிட்டு போகட்டுமே
மெளனமாக...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (20-May-16, 7:58 am)
Tanglish : ettaam suram
பார்வை : 193

மேலே