சுனாமி
’சுனாமி’ என்ற
மூன்றெழுத்து செல்லப்பிள்ளையே!
உனக்கு மட்டும்
ஏன் இவ்வளவு ஆணவம்?
இந்த உலகத்திடம்
சில நாழிகையிலே
ஆழிப்பேரலையாய் கோரத்தாண்டவமாடி
அனைவரையும் கலங்கடித்தாயே!
எத்தனை ஆண்டுகளாய்
திட்டம் தீட்டினாய்?
மாட மாளிகையில் இருந்தவரையும்
ஒரு நொடியில்
வீதியில் நிற்க வைத்து விட்டாயே!
குருவிக்கூடுகளாய் இருந்த
குடும்பங்களை
பிரித்து
சதி செய்து
அதில் ஒருவரை மட்டும்
பிழைக்க வைத்து
உன் பழியை
தீர்த்துக்கொண்டாயா?
உன் அகராதியில்
’கருணை’ என்ற சொல்லே
கிடையாதா என்ன?
உன் விளையாட்டை
உன் அன்னையிடம் மட்டுமே
தவழ்ந்து விளையாடு...!
அவளை விட்டு
என்றென்றும்
எப்போதும்
வெளியே வர நினையாதே!!!
வந்து
உன் அழகான பாதத்தை
அழிவுக்கு பயன்படுத்தாதே!
உனக்கு எங்களின்
வந்தனங்கள்...!