வேண்டும் வேண்டாம்
சில நேரம் தனிமை வேண்டும்
சில நேரம் தனிமை வேண்டாம்
நான் மட்டும் சந்தோசப் பட தனிமை வேண்டும்
நாம் சந்தோசப்பட தனிமை வேண்டாம்
நான் தன்னம்பிக்கையோடு நிற்கும்போது
தனிமை வேண்டும்
நான் தத்தளிக்கும் போது தனிமை வேண்டாம்
நான் என்னோடு பேச தனிமை வேண்டும்
நான் உன்னோடு பேச தனிமை வேண்டாம்
நான் என்னைச் செதுக்க தனிமைவேண்டும்
நான் என்னை வளர்க்க தனிமை வேண்டாம்
இயற்கையோடு உறவாட தனிமை வேண்டும்
இன்னல்களை சமாளிக்க தனிமை வேண்டாம்
இறைவனோடு பேசிமகிழ தனிமை வேண்டும்
இடர்களைத் தகர்த்தெறிய தனிமை வேண்டாம்
தனிமை
சில நேரம் நம்மை செதுக்கும்
சில நேரம் நம்மை மறக்கும்
பல நேரம் நம்மை புதைக்கும்
தனிமை நமக்கு மிகவும் தேவை -ஆனால்
தேவையான அளவுக்கு மட்டும் தேவை
தனிமை
சில நேரம் இதமாக நம்மை வருடும்
பல நேரம் வெறுப்பாய் நம்மை வறுக்கும்
அதனால் தான் இறைவன்
மனிதன் தனிமையாய் இருப்பது
நல்லது அல்ல என்றார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏற்றத் துணையை உண்டாக்குவேன் என்றார்
ஜாடிக்கு ஏற்ற மூடிகளாய் இறைவன்
நம்மைப் படைத்தார்
மூடி சில நேரம் ஜாடிக்குள்
நுழைய மறுத்தாலும்
பயனற்றதாகிவிடும்
தனிமை வாழ்வை இறைவனே விரும்புவது இல்லை -பின்பு
ஏன் நாம் தனிமை விரும்பிகளாய் வாழ
நினைக்க வேண்டும்
வெறுமையில் இன்பம் என்றும் இல்லை
தனிமையில் நிம்மதி என்றுமே சாத்தியமில்லை !!!!!!!!!!!!!!!!!!