ஜன்னல் ஓரம்

மரங்களூடே வெளியே தெரியும்
கரு மேகங்கள் கூட்டணி
அமைக்கும் அழகும்
தூரத்துப் பாக்கு மரத்தின்
கூர் குதிரில் அமர்ந்த
சிறு பறவையும்
நாலாவது மாடியின்
உச்சியில் தண்ணீர் தொட்டி
மேல் தவமிருக்கும் காக்கையும்
அந்த இளம் குளிரூடே
சென்னையும் சற்று
அழகுதான் ...
இந்த மழை பேய்தலின்
இடைவெளியில்.......
ஜன்னல் ஓரம் அமர்ந்து
----- முரளி

எழுதியவர் : முரளி (20-May-16, 7:23 am)
Tanglish : jannal oram
பார்வை : 673

மேலே