யாரும் இல்லாள்
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லோரும் வீட்டிற்குள்
நுழைய
இவள் மட்டும் ஏனோ
இயற்கையினுள் நுழைகிறாள்
பெய்யும் மழையின்
கைகளை குலுக்கிய படியே .,!!!..
மேலிருந்து கீழே விழும்
மழை துளி
எல்லோரையும் நனைக்கிறது
இவளை மட்டும்
ஏனோ அணைக்கிறது
யாரும் இல்லா பிள்ளை என...!!
கைகளை நீட்டியே வரம்
கேட்கிறாள்
மும்மாரி பொழிய வேண்டும் என..
நான் மும்மாரி வருகிறேன்
என்னை அணைத்துக்கொள்ள
அணை எங்கே என்றது ...??!!