ஒரு காதல் வலி

மெழுகுவத்தி பெண்ணே
உன்னில் காதல் ஓளியேற்றி
இறந்துப் போனதே தேகம் தீக்குச்சியாய்.....


நீ அணைத்திருந்தால்
நான் மீண்டும் பிறந்திருப்பேன்...
எரிய விட்டு அனைத்ததால்
சாம்பலாய் ஆனேன்......

மெழுகுவத்தி.....

பலாப்பழம் போன்றென் மனசு
வெளியில் பார்க்க கரடு முரடுதான்
உள் சென்றுப் பார்த்தால்
இன்பம் கசியும் இனிப்பு மேடுதான்......


புரியாது புரிந்தாய் நீயன்று...
அறியாது அறைந்தாய் நீயின்று...


ஊசியால் குத்தியிருந்தால் வெறும் காயந்தான்
உள்ளத்தால் குத்தி சென்றதால் பெண்ணே
உசுருக்குள் ஒரு தீ எரியுதே...
உன் நெஞ்சமதிலே குளிர் காயுதே......

மெழுகுவத்தி......

என் மனதில் நீயிருக்க
உன் மனதை நான் அறியவில்லை...
பெண் மனம் என்னவென்று
அறிந்தவர் இங்கு யாருமில்லை......


முள்ளிருக்கும் பாதை நீ நடந்தால்
முள் மீது பூவாய் நானிருந்தேன்......


இரு விழியால் இதயம் கவர்ந்து
ஒரு மொழியால் எனைத் துளைத்ததால்
என் விழிகளில் கண்ணீர் வீழ்ந்தோடுதே
உன் மேனியதிலே நீராடுதே......

மெழுகுவத்தி......

எழுதியவர் : இதயம் விஜய் (22-May-16, 1:34 pm)
Tanglish : oru kaadhal vali
பார்வை : 957

மேலே