தாய் தந்தை

நாம் மழலையில் இருக்கையில்
இதய அறையில் தந்தையும்
கருவறையில் தாயும்
நம்மை சுமந்தனர்...
பலர்
அவர்கள் முதுமையில்
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விடுகின்றனர்...
உண்மையில் தாய் பாலுண்டவன்
செய்வதா இது!
அவர்கள் கண்ணீரை
சிந்தவிடாதே!
அப்பாவம் எதை தந்தாலும்
ஈடாகாதே!
அவர்கள் முதுமையை
நீ மழலையாய்
நினைக்க கற்றுக்கொள்...
இந்நிலைமை நாளை
உனக்கு வரலாம்
என நினைத்துக்கொள்...
தாயே கடவுள் !!!
தந்தையே கடவுள்!!!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (23-May-16, 6:03 pm)
Tanglish : thaay thanthai
பார்வை : 86

மேலே