கனவுகள் விதை , இழப்பது எதை
மனதைத் திற , வானில் பற
பேதங்கள் மற , இதயத்தைத் திற
சீற்றம் குறை , சாந்தம் நிறை
இன்சொல் இடு , சுடுசொல் விடு
தீயவை துற, நேர் வழி நட
பொய்களை ஒழி , மெய்யதை மொழி
புன்னகை புரி , புன்செயல் எரி
நன்றே நினை , தெய்வம் துணை
தயக்கம் களை , தைரியம் விளை
தளைகளை உடை , பயமே விலை.
அச்சம் விடு , உச்சியைத் தொடு.
துணிவே துணை , அதற்கில்லை இணை.
சிறகை விரி , சாதனை புரி
லட்சியம் அடை , அதற்கில்லை தடை
கனவுகள் விதை , இழப்பது எதை?
நன்றே நினை , தெய்வம் துணை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
