கனாக்களின் ஆதங்கம்

கற்பனை பல புரிந்துவிட்டு,
வெறும் கனவு, பகற் கனவு என,
நிகழ்வுகளோடு என்னை ஒப்பிட்டு பரிகசிக்கும்-மானுடரே!

மறந்தும் தான் போனீரோ?
இல்லை என் எல்லை எண்ணம் வரை என்பதால்,
என்னை பற்றி எண்ணவும் விழையீரோ?

நிகழ்வுகள் காலத்தின் கட்டுப்பாட்டில்.
நிற்பதில்லை அவை எவருக்கும்!
நிகழ்வுகளின் எச்சம் நினைவுகள்,
நினைவுகளின் முக்கியத்துவம் உணர்வுகளிலே!

அந்நினைவுகளில்,
அதி முக்கியமானவற்றை,
அலசி எடுத்து பரிணமிக்கும் நான்!

உம் உணர்வுகளை ஆசுவசிக்க பிறக்கும் நான்!
பரிகசிக்க படுவதும்,..

காலதேவனின் அடிமையாம் நிகழ்வுகள்,அவை!
நாளை நிழல்களாகி- என் காலடியில் கிடக்கும் அவை!
போற்றப்படுவதும் ...
நியாயம் தானோ ?!!

எழுதியவர் : மகா !!! (24-May-16, 5:14 pm)
பார்வை : 85

மேலே