என் பிறந்த நாள் வாழ்த்து

பூவிலே சிறந்த பூ
ஒன்று
புதிதாய் பிறந்த
நாள் இன்று...
வானத்தில் உதித்த
நிலவு
ஒன்று வரமாய்
பூமிக்கு
வந்த நாள் இன்று..
வாழ்த்து
சொல்ல வார்த்தைகள்
வேண்டாம்
அவளின் புன்னகை
ஒன்று போதும்..
ஆயிரம் கவிஞர்களின்
வாழ்த்துகளும் ஒன்றாய் அமையும்..
பிறந்த வருடம்
பிரிந்து விடும்..
புதிய நாள்
நினைக்காத வாழ்கை
நிறைந்த சந்தோஷம்...
பிறந்த நாளை விட
பிறந்த நாள் கொண்டாடும்
நாளே இனிமையானது...
நினைவில் கூட
இல்லாத இந்நாள்..
நிரந்தரமாய் அமையும்
இந்த வருட
பிறந்த நாள்...
வாழ்த்து சொல்லும் நெஞ்சங்கள்
என் வாழ்கையின் புதிய சங்கீதங்கள்...