கவிதை தந்த கவிதை
கவிதை தந்த கவிதை உன்னை
பிடிக்காதிருக்குமா? - இளம்
கவிஞனன் எனக்கு
என் தூக்கம் தொலைந்து
வெகு நாளாச்சு - உன்
நினைவலைகளால்...
முதற் கண் பார்வையிலே
வீழ்ந்தேன் - நான்
காதல் கடலில்தான்
உன் முத்துச் சிரிப்பினிலே
மூழ்காமல் இருப்பேனா
அற்புத முத்தெடுக்க
மஞ்சள் வெயில் தேவதையை
ஒரு மாலை நேர சூரியன்தான்
வந்து உன்னை இரசிக்காமல்
துயிலத்தான் சென்றிடுமா?
கரிய குயிலின் இனிய இசையை
கேட்காமல் இருந்தால்
நானொரு அஃறிணைதான்
மண்வாசம் அறிய வந்த
மழைத்துளிதான் நான்
என்னைக் கண்டதும்
நீ மெளனம் கொள்வது ஏன்?
ஓ! மெளனமாய் இருந்து
உன் காதல் சம்மதத்தை
பறைசாற்றுகிறாயோ
உனக்குள் நான்
இருந்தால் போதும்
நான் இங்கு உயிர் வாழ்வேன்
செந்தமிழ் மொழியாய்...