ஆசைப்படும் தோழா
ஆசைப்படு தோழா ஆசைப்படு
அத்தனைக்கும் நீ ஆசைப்படு!
அனுபவித்த ஒவ்வொன்றையும் நீ
துறந்து செல்ல முடியும் என்றால்
ஆசைப்படு தோழா ஆசைப்படு
இன்பமும் துன்பமும்
உன் எண்ணத்தில்தான் உள்ளது
ஏற்றமும் இறக்கமும்
உன் உழைப்பினில்தான் இருக்கிறது
ஆதலால்,
ஆசைப்படு தோழா ஆசைப்படு!
கடவுளிடம் வேண்டினால் மட்டும் கிடைக்காது
நீ விரும்பித் தேடி ஓடினால்
உன் கைகளுக்கு கிடைக்காதது எது?
அன்பை விதைக்க தயங்காதே
ஆசையை செலவு செய்ய மறக்காதே
பணத்தைக் கண்டு மயங்காதே
அது கருப்பாய் போய்விட்டால்
உனக்கு நிம்மதி கிடைக்காதே
நிலைவைப் பார்க்க கண் போதும்
அதனை பிடிக்க அறிவியல் வேண்டும்
ஆதலால், நீயும் தினம் தேடி ஓடிடு
அறிவின் சிகரத்தில் ஏறிடு
என்னால் முடியும் என்றே
முயன்று தினம் பார்த்திடு
அடிபட்டது போதுமென்றால்
அனுபம் இன்னும் வேண்டுமென்றால்
ஆசைப்படு தோழா ஆசைப்படு!