தினம் ஒரு தாலாட்டு - இயற்கை - 10 = 114

“காற்றுக்கென்ன கோபம்
கடலறையில் தோன்றும்
அலைகளை கரைகளுக்கு
விரட்டி அடிக்குதே...!
அலைகள் திரும்பிவந்து
கடலிடமே தஞ்சம் புகுதே.. !”

“உலகம் தோன்றிய முதலாய்
ஓயாத பணியாய்
இன்றுவரை இந்த நிலைமை
நிலைத்து வருது
இதை தடுப்பற்கு வழியில்லை
என்ன செய்வது ?”

காற்று செய்யும் பாவம்
நாளும் இந்த கோரம்
கடலுக்கு வாயிருந்தால்
கதறி கதறி அழுவும்
காற்றை கடுஞ்சொல்லாலே இகழும்..!

மீன் பிடிக்கப் போகும்
மீனவனின் கோபம்
அலைமீது பட்டு பட்டு
நுரையாக மாறுதோ
கடல் கடுஞ் சினம் கொண்டு சீறுதோ..!

மாலையிட்ட மங்கை
சேலை கழட்டி வந்து
அத்தானின் மார்பில்
பொத்தென்று விழுதல்போல்
இந்த முத்தான அலைகள்
முட்டி முட்டி மோதுதே….!

மாரிக்காலம் வந்தால்
மலை போலே உயர்ந்து
ஊருக்கே உலை வைக்கும்
உபத்திர அலையென்று
எண்ணத் தோன்றுது
அதன் அந்தரங்கம்
புரியாத புதிரானது !

எழுதியவர் : சாய்மாறன் (24-May-16, 10:12 pm)
பார்வை : 113

மேலே