உந்தன் நாவால்

உன்னை நேசித்து ஒரு கவிதை படைத்தேன்
உன்னிடம் அதைக் கொடுக்க நினைத்தேன்
உன்னால் நானும் இன்று ஒரு கவிஞன்
உனக்காகப் படைக்கப்பட்ட உயிருதுவே!
உனக்கே நானும் கொடுத்துவிட்டேன்

உனக்கோ உள்ளது இளகிய மனம்
உன்னுடைய மனதில் எனக்கிடமுண்டோ?
உனக்கும் இது புதிதன்றோ?

உன்னில் சரிபாதி நானாகவே
உன்னுடன் கைகோர்த்து நடந்திடவே
உன்னோடு வாழ்வைப் பகிர்ந்திடவே
உன்மேல் காதல் நானும் கொண்டு
உனக்காய்ப் படைத்தக் கவியிதுவே!
உன்னுள் மறைந்திருக்கும் அக்காதலை
உந்தன் நாவால் உரைத்திடுவே!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (25-May-16, 7:14 am)
பார்வை : 78

மேலே