பொன்னரளி பூக்களை கொறிக்கும் தவிட்டுக் குருவி
பூமியின் ஒடுயர்த்தும்
நிலக்கடலை விதையிலைகளை
ஒரு அவரை பூவை
துளிர் விட்ட
ஏழிலைக் கிழங்கு வெட்டுத் துண்டை
பனந்தூரில் திரியும் எறும்புகளை
பயிருக்கு வாய்மடை திருப்பி
வாய்க்காலில் விட்ட தண்ணீரில்
சிறகு சிலுப்பி குளிக்கும் காகங்களை
பொன்னரளி பூக்களை கொறிக்கும்
தவிட்டுக் குருவிகளை
இன்று பார்க்க முடிய வில்லை
இந்த மாத ஊதியக் காரன்
இன்று தோட்டத்திற்கு செல்லாமல்
அலுவலகத்திற்கு சென்று விட்டான்