காதல் பிழைகள்

சீண்டலும் சுகமும்
கருத்தரித்த அந்த
நாட்களை நினைத்து .....
சுவாசம் விடுகிறேன்
காதல் வலிமையானதுதான்
காலம் முழுவதும் வாழ்வதால் ....


நீயும் நானும்
மோதி கொண்ட நாட்கள்
அதிகம் ...
காதலில் மோதல்தான்
பிள்ளையார் சுழி
நிலத்தை மோதி
விதை கருத்தரிப்பது போல

உன் விழி பேச்சில்
நடத்த பொய் கோபம்
நிலவுக்கு பூச்சாண்டி
கட்டும் மின்னல் போல

ரசிப்பதை
மறைபபதுதான்
பெண்மையா

விரல் கடித்து
தலை கவிழ்ந்து
நாணம் சொன்ன
அந்த காலம் போல தான்
இப்போதும் ....

கை பேசியை
பார்ப்பது போல
நீ நாணத்தை
சொல்லும் போது
பெண்மை
மாறவில்லை என்பதை
காண்கிறேன் .....

உன் காதில் ஜொலிக்கும்
சின்ன கம்மல் கூட
என்னை வேவு பார்க்கும்
வேலையை செய்கிறது ..
நான் செல்லும்
திசை எல்லாம்
எல்லை காவலனாகிறது ,,,

உன் கால் செருப்பில்
சிக்கும் சேலை மடிப்பு
கணனிக்கு தகவல்
கொண்டு போகும்
மின் இயக்கம் போல
எனக்கு தகவலை
கடத்துகிறது
உன் நடையில்
காதல் வந்து விட்டது என ......

யாரும் பார்த்து விடகூடாது என
நீ என்னை காணும் போது
செய்யும் படபடப்பு
பிழைகள் ஆகி
காதலை சொல்லி விடுகிறது.....
உன் பிழைகள் தான்
எனக்கு சிக்னல் ....

உள்ளததில் உள்ளமாய்
நிற்பவள் தோழி ...
உள்ளததில் தாய்மை
காட்டுபவள் காதலி ....
உன் தாய்மைதான்
காதலின் பிழைகள் ..

ரசிக்கிறேன் உன்
பிழைகளை ....
காதலில் பிழைகள் தான்
சரியாகிறது ,,,,


நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (25-May-16, 5:58 pm)
Tanglish : kaadhal pilaikal
பார்வை : 283

மேலே