பெரியவர்களுக்குப் பாடம்…

இருப்பதைக் கொடுத்திடும் பழக்கமது
இளமை முதலே வரவேண்டும்,
உருப்படும் வழியிதை உணர்ந்தேதான்
உள்ளதைப் பகிர்ந்தே உண்ணுவதின்
பெருமை தெரிந்தோ தெரியாமலோ
பிள்ளைகள் பிறர்க்குக் கொடுக்குமிந்த
அருமை யான பாடமதை
அறிந்து கொள்வீர் பெரியோர்களே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-May-16, 5:54 pm)
பார்வை : 65

மேலே