நான் தமிழன்

நான் தமிழன்

நான் தமிழன்டா! தமிழன்டா
என இந்த அண்டம் முழுதும்
முழங்கினாலும்!

நான் ஆள ஒரு பூமி
எனக்கில்லை!

நியாயம் கேட்டு நீதியைப் பெற
எனகென்று நல்ல
தலைவன் இல்லை!

நானாக தனியே போரிட்ட போது
சிறு காக்கையும்
துணை இல்லை!

ஆயினும் நான் தமிழனே!
ஆயிரம் தடை வரினும்
எதிர்கொண்டு வெல்பவனே!

என்னுள் ஆயிரம் சாதிக்கும்
எண்ணமுண்டு

ஆனால், இன்று ஜாதி என்னை
ஆள விட்டு விட்டேன்!

காதலுக்கு இலக்கணம் தந்த
இந்த தமிழன்

இன்று,காதலுக்கும், காமத்துக்கும்
உள்ள வேறு பாட்டை
தொலைத்தேன்!

தமிழன் என்ற இருமாப்பும்
என் தன்னம்பிக்கையும் என்னை
வீட்டு நீங்க!

கரைதேடும் படகாய்
பாற்கடலில் வழியினை
தொலைத்தேன்!

என் உடன்பிறப்பு உள்ளான்
என அக மகிழ்ந்தேன்!

அவனோ என்னை சாராய
சாக்கடையில் என்னை
கரைத்து விட்டுப் போனான்!

அந்தோ என்னை காக்க
வந்த என் வேற்று
சகோதரனின் கையும்

இன்று கருவேல
முள்ளாய் மாற

இந்த கருப்புத் தமிழன்-சற்று
கலங்கிப் போனேன்

மோதி மிதித்தேன் மீண்டும் -ஒரு
முறை ஜனித்தேன்!

இனி என்னை ஆள-எனக்குத்
தலைவன் ஏன் ?
என உணர்ந்தேன்

நானே தலைவன் ஆனேன்
இனி எனை ஆள
தமிழ் தாயே போதும்!

இனியேனும் எம்மக்கள்
நலமுடன்வாழ

அவள் ஆசியோடு அமைத்திடுவோம்
ஒரு நற்பூமியினை!
இவண்
கலாம்பிரியன்
(எ)
ம.சிவக்குமார்

எழுதியவர் : கலாம் ப்ரியன் (26-May-16, 4:24 pm)
Tanglish : naan thamizhan
பார்வை : 670

மேலே