தமிழ் எங்கள் உயிர்

தமிழ் எங்கள் உயிர் !


நலம்பலதரும் நம்உயிரினும்மிகு
உலகினில்நிதம் பயிலுதல்நலம்
உறவுகளுனை மதித்திடும்படி
சிறப்பினைப்பெற தமிழினைப்படி
வரந்தரும்வழி விரைந்திடுமுனை
பனிமலர்பொழில் பசுமையின்எழில்
பனிமலர்பொழில் பசுமையின்எழில்
கனிநிகர்மகள் கவிச்சுவையுடை
இதந்தருந்தமிழ் இனிமையின்உயிர்
பதந்தரும்குணம் பரவசமிகு
வழங்கிடும்நலம் வளமதையுணர்
பழகிடும்வரை பயமினியிலை
செவிவழிச்செலச் சிறப்புகள்வளர்
கவிதைகள்பல கருத்தினில்சுகம்
பலமுறைதர பதங்களும்வர
நலம்பலதரும் நனிமிகுகவி
தமிழ்மொழிதர தரத்தினில்உயர்
அமிழ்தினும்நிகர் அனைத்திலும்வளர்
உயிரினும்மிகு உணர்சிகள்தரும்
வியன்பொருள்தமிழ் விரைந்துமேபயில

இதனாற்றான்

தமிழ்மொழி சுகம்தரும் தனிநிகர் மொழியினால்
அமிழ்தமும் திகட்டும் அற்புதம் தரவே
செந்தமிழ் நிதமும் செம்மையாய்ப் பயிலச்
சிந்தையில் சிறப்பைக் காண
என்றன் நெஞ்சம் நாடுதல் தமிழே !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-May-16, 1:09 pm)
பார்வை : 248

மேலே