கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை - சமஸ்
தேர்தல் காலத்தில் மட்டும் வெளியே வந்து மக்களுக்குக் கும்பிடு போடுபவர்களாக திமுகவினர் மாறி நீண்ட காலமாவிட்டது. அவர்கள்
போராட்டவாசம், சிறைவாசம் மறந்து யுகமாகிவிட்டது. துடிப்பான எதிர்ப்பார்ப்பரசியலுக்குப் பேர் போன ஒரு கட்சி, ஜெயலலிதா
தானாகத் தடுக்கிவிழும் ஒரு சந்தர்ப்பத்திற்காக மட்டும் ஏங்கி இயங்கிக்கொண்டிருப்பது அவலம். அதிமுக மீதான அதிருப்தியின்
அனுகூல எதிர்பார்ப்பு அல்லது அதிமுக போலச்செய்யும் உத்தி இவை இரண்டின் வாயிலாக மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியும்
என்று திமுக நம்பியதும் நம்புவதும் மூடநம்பிக்கையின்றி வேறென்ன?
@@@@@@@@@@@@@@@
’தி இந்து’ நாளிதழ் வெள்ளி, மே. 27, 2016. சமஸ் அவர்கள் எழுதிய ’கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை’ என்ற கட்டுரையின் சுருக்கம்.
@@@@@@@@@@@@
படம்: ஒன்இண்டியாகாம்