அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்!
நாம் அழுது கொண்டே சிரிக்கின்றோம்!
பிறப்பிலே யாரும் கோழையில்லை!
இறந்த பின்பும் வாழ்வது சிலரே!

நேதாஜி போல வீரத்துடனும்,
காந்திஜி போல விவேகத்துடனும்,
நேருஜி போல அன்பினாலும்,
பிறப்பவர் ஒரு சிலரே!

வீரமும் விவேகமும் இணைந்தே வேண்டும்!
பிறரிடம் அன்பு செலுத்தி உதவிடல் வேண்டும்!
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
(திருக்குறள் 78)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-16, 6:41 pm)
பார்வை : 247

மேலே