நூறு சதம்

பெட்டி நிறைய பணம், நகை
என்று பூட்டி வைத்திருக்கும்
ஒரு பெண்ணுக்கு
மேலும்
பணக்கார மாப்பிள்ளை வாய்த்து,
அவளை
மேலும் நகையால்
குளிப்பாட்டுவது போல
இருக்கிறது
சில பள்ளிகளின் சிறப்பான வேலைப்பாடு

ஏற்கனவே முதல் மதிப்பெண்
வாங்கி வரும் மாணவர்களை
தன் பள்ளியில் சேர்த்துக் கொண்டு
நூறு சதம் மதிப்பெண் வாங்க வைப்பது
என்ன சாதனை??

படிப்பில் குறைபாடு என்பதும்
ஒரு நோய்தான்
அதை பள்ளி என்ற
மருத்துவமனையில்,
ஆசிரியர் என்ற மருத்துவர்தானே
சரி செய்ய வேண்டும்

அதை விடுத்து நூறு சதம்
வேண்டும் என்று பறந்தால்
அந்த நோயாளி எங்கே போவான்?

எழுதியவர் : சாந்தி ராஜி (27-May-16, 5:39 pm)
Tanglish : nooru satham
பார்வை : 79

மேலே