கடந்த கால நினைவுகள்
கடந்த கால நினைவுகளை அழிக்க முடியாததால் ஏடுகளில் எழுத்தால் கிறுக்குகிறேன்.
கனவுகளில் நினைவுகளை
கலைத்து பார்க்கிறேன் -நினைவோ
மேகமாய் பிரிந்து மேக மூட்டமாய்
என்னை சூழ்கிறது
கண்ணில் மழையாய் நினைவுகள்
கனவில் பொழிய
கன்னங்களோடு கண்ணீர் துளி
அழியாத பாதைகளாய் காய்கிறது
நிலையான நெஞ்சில் நினைவுகள்
அலையாக அலைகிறது
மலையான மனதில் நினைவுகள்
உளியாய் குடைகிறது
நான் சுவாசிக்கும் நினைவுகள்
புயலாக வீசி
நான் நேசிக்கும் நினைவுகளை
தூசி தட்டுது
அவள் என் மார்சாய்ந்து
ஓய்ந்த இதயம்
இன்று தட்டி தட்டி எழுப்புகிறது
காய்ந்த நினைவுகளை
நான் மறைந்து நின்றாலும்
மழைச் சாரலாய் நினைவுகள்
என் உள்ளம் புகுந்து
நினைவினை நனைக்குதே
தொலைக்காத இடத்தில்
தொலைந்த துகளாய்
மறக்க முடியாத இதயத்தில்
மறைக்கும் நினைவுகள்
வெறுத்தாலும் களைக்கலாம்
நினைவுகளை
நினைத்ததால் கோர்க்கிறேன்
வார்த்தைகளை
விட்டுச் செல்ல நினைக்கவில்லை
உன் நினைவுகளை
என்னை தொட்டுச் செல்லும்
உன் கனவுகளால்
சொல்லால் உன்னை வெல்ல
முடியவில்லை
உன்னால் விட்ட நினைவை அல்ல
முடியவில்லை
நினைவுகளை மட்டுமே
விட்டு சென்றாயோ - என்
கனவுகளை மட்டுமே
தொட்டு செல்கிறது
பூவான உன் புன்னகையில்
பூத்தேனே பெண்ணே
வாடாத உன் வாசனையை - என்
வாழ்வாக்கத்தானே
வீசும் தென்றலில் நீ
மோதும் பூவாய் என்னில் சாய்ந்து நீ
பேசும் வார்த்தையில்
எழுதும் வரிகளாய் என்னுள் பாய்ந்து
பாலா போன மனசுல
பாலாய் உன் நினைவுகள் பாய
வெட்டு போட்ட நெஞ்சுல
பத்து போட்டு போகுதே
உருகும் நினைவுகள்
உள்ளத்தில்
கருகிடுமோ கனவுள்
கண்ணுக்குள்
வெளுத்தாலும் பால்
பால் தான் - நீ என்னை
வெறுத்தாலும் என்னுள் என்றுமே
மேல் தான் நீ
அடிமேல் அடி வைத்து
நடந்தாயடி மண்ணில்
செடிமேல் கொடி பின்னி
கடந்தாயடி என்னில்
உன்னை மெட்டி இழுக்க (எட்டி பிடிக்க)
முடியவில்லை
என்னால் மெட்டி போட
முடியவில்லை
நினைவோ ஒரு பறவை அதன்
சிறகோ பல வண்ண கலவை
என்னை விட்டு பறக்காது - சிறகை
என் நெஞ்சில் தட்டி சிரிக்குது
வண்ண நினைவுகள் பறக்குது.
பூத்த மலராய் என்னில்
கோர்த்த உன் நினைவுகளை உதிர்துவிட்டேன்
என் நினைவிலேயே செதுக்குவேன் செப்பு சிலையாக உன்னை
நான் செத்தாலும்...
--- நிவாஸ் ந