அழகு

பத்து திங்கள்
தாயின் கருவில் மலர்ந்து
உதிர்ந்தாலும்
பூவை நோக்கி புன்னகை சிந்தும்
அவள் வதனம் அழகு ......


இரவிலும் துயில் துறந்து
மழலை காக்கும்
உறங்காத கண்கள் அழகு ......


எட்டி எட்டி நெஞ்சிலே
மிதித்தாலும்
எதிர்த்து ஒன்றும் செய்யாது
தந்தையின் பொறுமை அழகு ......


அம்மா... அம்மா ...
கொஞ்சும் பிஞ்சுப் பூவின்
மரகத குரலோ?... அழகு .......


மூன்றெழுத்து ஆனாலும்
முக்கனியின் சுவையை விட
தமிழ் மொழியின் இனிமை அழகு ......


கண் இமையும் நொடியில்
வந்துப் போகும்
காதல் அழகு ......


அறிந்திடாது...
தெரிந்திடாது...
நெஞ்சம் பகிரும் அதிசயப் பிறவி
நட்பு அழகு ......


இருந்தாலும் இறந்தாலும்
மாலையில் சேரும் பூக்கள்
அழகு ......


அழகிலும் அழகு
அனைவரிடம் காட்டும் அன்பே அழகு .........

எழுதியவர் : இதயம் விஜய் (29-May-16, 9:31 am)
Tanglish : alagu
பார்வை : 536

மேலே