முல்லைத் திருவிழா

நாரில் நறுமணமுடன்
சிரிக்கும் முல்லை
பாரி வள்ளல் தந்த போது
தேரில் உயர்ந்தது !
காரின் கருமுகில்கள்
தூறலால் வாழ்த்தியது !
காரிகையர் சூழ வந்து
கருங் கூந்தலில் சூடினர் !
தேரில் வந்த மன்னவர்கள்
கரம் பிடித்து மாலை சூட்டினர்
ஊரின் வீதியெல்லாம் கொண்டாடுகிறது
திருமண முல்லைத் திருவிழா !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-16, 9:03 am)
பார்வை : 155

மேலே