நீயும் நானும் சேர்ந்தோமடா

உலகளந்தான்
மண்ணளந்தான்
பொன்னளந்தான்
ஏனோ என்ன மட்டும் அளக்க மறந்தான்
என் அன்ப அளக்க மறந்தான்
என் உசுர கலக்க மறந்தான்
என் விரல பிடிச்சி
கரையேத்த(நடக்க) மறந்தான்
தத்தளிக்கிறன் நான் அவன் இல்லாம
முழுகறதுக்குள்ள வந்துடுவல்ல
முழுகி மிதக்கிறேன்
உனக்குள்ளே
என்னில் நீ கலக்கவில்லை
என்றாலும்
உன்னில் நான் கரைந்துவிட்டேனடா
உனை நாடி அலைந்தேனடா
எனை தேடி நீ அலையாதேடா
நான் உனை தவிக்கவிடமாட்டேனடா
உன் தேடலில் இதயதுடிப்பில் நினைவில் நான் இருக்கிறேனடா
நீ நடக்கும் பாதையில்
(உன் கை கோர்த்து நடக்க ஆசைபட்டேனடா) நான் இருக்கிறேனடா
நீ நடக்கும் பாதையாகிறேனடா
உன் பாதமாகிறேனடா
உயிர் ஜோதியில் கலந்தேனடா
உன் மலரடி தொழுதேனடா
நீயாய் ஆகினேனடா

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-May-16, 8:27 am)
பார்வை : 144

மேலே