காதலோடு காதலில்
என்னருகில் அவள் இல்லை என்றால்
கண்ணீர் மழையில் கடலும் மூழ்கிடும்
அவளைப் பார்க்கும் நொடியினிலே
இரு கண்களும் புன்னகை சிந்திடும்......
தனிமையில் நின்றிருந்தாலும்
இரும்புப் போன்ற என் மனதை
கடந்துப் போகும் அவளோ?...
காந்தமாய் கவர்ந்திடுவாள்......
ஆழி எழும்பும் அலைகள் போல
நெஞ்சின் ஆசையை தூண்டிடுவாள்...
உறங்கும் இமைகளின் இடையில்
எப்படியும் நுழைந்திடுவாள்......
இம்சைகளே செய்தாலும் இனிமையும் தந்திடுவாள்......
இதழ் திறக்காத பூவில் தேனூறும்
அலரெல்லாம் மாலையில் ஒன்று சேரும்...
கல்லும் கல்லும் உரச நெருப்பு வரும்...
மனசு இரண்டும் உரச காதல் மலரும்......
இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டு
என்னவள் எங்கே என்று
காற்றாய் தேடிச் செல்லும்......
கனவிலே வந்தாலும்
கண்ணை விட்டு அவள் மறையவில்லை...
பார்க்கும் இடமெங்கும் பாவை நிழலோ?...
நெஞ்சை விட்டு தொலையவில்லை......
தொலைவினில் தோன்றினாலும்
கானலாய் காட்சிக் காண்கிறேன்...
நெருங்கிச் சென்றாலும்
இருவிழிப் பார்வைவில் நான் மயங்குகிறேன்......
காதல் எனும் வார்த்தையில்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நித்தம் நித்தம் அவளை நினைத்தே
ஏங்குகிறேன் நான் ஏங்குகிறேன்
காதலோடு காதலிலே வாழ்கிறேன்..........