நினைவுகளின் இனிமைகள்
தனிமையாய் நின்ற போது
துணிச்சலாய் பேசுகின்றன
அவள் என்
காதலி என்று.!
எத்தனை வலி
என் விழிகளில் ஓடுகின்றன
சிவப்பு துளியாய்
என் தனிமை புரிந்து
வடிகின்றது இரத்ததுளிகள்
பாதைகள் கூட
பகிரங்கமாய் கூறுகின்றது
அவள் இல்லாத
நேரம் உன் காலமும்
முடிந்துவிடும் என்று
தாகம் தீர்க்கும்
தண்ணீர் கூட
என்னை கண்டு மறைகின்றது
நான் பருகுகின்ற
அளவுக்கு தண்ணீர் இருந்த போதும்.
ஏன் காரணம் என என்
மனதிடம் கேட்ட போது
காதலின் வலிகள்
புரிந்துள்ளது உன்னை
அறிந்திருக்கும் நீருக்கு என்று
பதில் கூறிவந்தது
என் மனம்
சத்தம் போடும்
மழைத்துளிகளும்
நான் நடக்கும்
பாதையில் விழவில்லை
காரணம் தனிமை
எனும் போர்வை என்
மீது விழுந்து கிடந்துள்ளது
என்றாவது புரியும்
அன்று அழைந்து
திரிந்த நாட்களும் கண்ணீர்
வடிக்கும்
நான்
துடித்தை மனதில்
நினைத்தபடி
கவிஞர் அஜ்மல்கான்
பசறடிச்சேனை பொத்துவில்