மின்னல் உதயம்
அன்பே எழில் அழகே!
என் கண் முன்
ஒரு பெண்னென நீ வந்திருந்தால்
சாதரணமாய் நானும்
கண்டும் காணாமலும் சென்றிருப்பேன்
நிலவாய் நீ வந்திருந்தால்
சிறிது நேரம் நின்று உன்னை இரசிதிருப்பேன்
மின்னலாய் நீ வந்து தோன்றி
என் இதயத்தில் இடி விழச் செய்து விட்டு
எங்கே ஓடி ஒழிந்து கொண்டாய்?
பெண்ணே பேரழகே!
உன்னைக் கண்டு
இடிந்து போய் நிற்கிறேன்
மீண்டும் நீ உதயமாவது எந்த நாள்?
அந்த நாள் வரையில்
உன் நினைவோடுதான்
உறவாடுவேன் நான்
எல்லார் வாழ்விலும்
எதிர்பாரதவைதான் நடக்கிறது
ஆனால் என் வாழ்க்கை மட்டும்
நான் நினைத்த படியே பலிக்கிறது
மின்னல் கொடியே
நான் நினைத்த மறு நொடியில்
எனக்குள் எப்படி உதயமானாய்?
அதிகாலையில் தினம் கிழக்கில்
உதயமாகும் இளம் சூரியனை
வரவேற்கவே வாசலில் நீர் தெளித்து
வண்ணக் கோலமிட்டு
எழுந்து வா வா என்று அழைக்கும்
கிராமத்து கன்னியே !
உன் விழி வாசல்வரை வந்த என்னை
வலது கால் எடுத்து வைத்து
என் இதய வீட்டினுள் வாவென
விரைவில் அழைக்கதான் போய்கிறாய்
நானும் உன் மனக்கதவை திறந்து
வாழத்தான் போகிறேன்
காதலனாய் உன் வீட்டுக்காரனாய்...!