சமத்துவம் பாடும் காதல்

அவள் அவளாகத்தான் இருக்கிறாள்
ஆனால் நான்தான் இன்று நானாக இல்லை
இந்த நிலைக்கு காரணம்
அவள் மீது நான் கொண்ட
பேராசைதானோ?

நிலவே !
உனக்கும் எனக்கும் இடையில்
எப்படி பிறந்தது காதல்?
அது நன்றாய் வளரட்டும்
நமக்குள்ளே!

காதல் கொடிதான்
படர்ந்து வளரட்டும்
பூமியெங்கும்...

காதலர்களை வாழ்த்தி
வாழ விடாமல் விரட்டும்
இச்சமுகத்தை எதிர்த்து
நீயும் நானும் சேர்ந்து
வாழ்ந்து காட்டுவோம்

அவர்கள் நினைத்ததிற்கு
ஒருபடி மேலே சென்று
கைகோர்த்து தூக்கி
சமத்துவத்தை உணர வைப்போம் !

எழுதியவர் : கிச்சாபாரதி (29-May-16, 7:54 pm)
பார்வை : 53

மேலே