இதற்கு என்ன பெயர்
உடன் பிறந்து
உடல் சிதைந்து
உள்ளம் கரைந்து
உணர்வுகள் மறைந்ததற்கு
என்ன பெயர்
நினைவுக்குள் கற்பனையாய்
வாழ்ந்த மனதுக்கு
என்ன பெயர்
இதயங்கள் இரைகலாய்
மாறியதற்கு என்ன பெயர்
சாலை ஓரத்தில்
சோலையாய் பூத்து
கிடக்கும் மலருக்கு
என்ன பெயர்
வானம் பாடும்
மழைக்கு காதல்
கொண்டு காற்று
வீசினால் இதற்கு
என்ன பெயர்
பேசாத உள்ளம்
அவோசமாய் கூறுகின்றது
நான் பாவி என்று
இதற்கு என்ன பெயர்
உணர்த்திய உணர்வுகளும்
ஊமையாய் ஓடுகின்றன
இதற்கு என்ன பெயர்
கூறட்டும் கண்டு
பிடிக்காத மொழிகளில்
என் கோதிகளை பற்றி
எத்தனை பெயர்கள்
உள்ளது
என் உள்ளதில் உதிர்த்திடாத
கள்ளம் கொண்டு
பேச
என் எண்ணங்களை பற்றி
கவிஞர் அஜ்மல்கான்
பசறடிச்சேனை பாெத்துவில்