இது யார் செய்த பிழை
தீனிபோடாமல்
செழித்து வளர்கிறது
பார்த்தீனியம்
தீனிபோட்டும்
வளர்வதில்லை
பார் திணையை
இது யார் செய்த பிழை
~ பிரபாவதி வீரமுத்து
நிகழ்வு :
நான் 2011மேல்நிலை படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சேர்ந்தேன். கல்லூரியில் இளங்கலை கணினி பயன்பாட்டுதுறை மாணவி.அப்பொழுது கல்லூரியில் நாட்டு நலபணி திட்டத்தில் (NSS) சேர்ந்து சேவையாற்றினேன்.
எங்கள் கல்லூரியில் NSS சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
விருந்தினர் அவர்கள் எப்படி எல்லாம்
சேவை செய்ய வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார்.
எனக்கு தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உண்டு.
(அம்மா எனை திட்டுவார்கள் சாப்பிடும் பொழுது கூட செய்தி தாள் படிக்க வேண்டுமா என்று.
இது என்ன
நான் நாளைக்கு தேர்வு என்றால் இன்றைக்கு உட்கார்ந்து செய்தித்தாள் படிப்பேன்.
அம்மா சமையல் அறையில் இருந்து வந்து நாளைக்கு இதைத்தான் தேர்வில் எழுத போகிறாயா என்று கேட்பார்கள்.நான் இன்றளவும் அப்படியே இருக்கிறேன் அம்மாவும் அப்படியே இருக்கிறார்.
(அம்மாவிற்கு நான் செய்தித்தாள் படிப்பதில் உடன்பாடு அதை எந்த நேரத்தில் படிக்கிறேன் என்பதிலும் ஈடுபாடு எடுத்துக்கொள்வார்கள்.....
அது தான் அம்மா என்பது))
(அப்பாவை பார்த்து தான் நானும் செய்தித்தாள் வாசிக்க சிறுவயதிலேயே தொடங்கிவிட்டேன்.
காலை 6 மணிக்கு அப்பா செய்தித்தாளும் கையுமாய் தான் இருப்பார்.
நான் அந்த செய்தித்தாளில் இருந்து ஒரு தாளை உருவி கொண்டு வந்துவிடுவேன்.உடனே அப்பா "பிரபா" என்று கூப்பிடுவார்.)(அப்பா எனக்கு 3 வயது இருக்கும் பொழுதே நிறைய நீதிகதைகள் , மகாபாரதம், இராமாயாணம் என்று எனக்கு சொல்லுவார்)(நான் கவிதை எழுத காரணம் அப்பாவாக தான் இருக்கும்
மூன்றாவது படிக்கும் பொழுது பள்ளியில் முதல்மதிப்பெண் பெற்றேன்.
அப்பாவிடம் வந்து சொன்னேன்.
அப்பா கடையில் இருந்து ஒரு பேனாவை எடுத்து கையில் தந்து
இதுவெறும் எழுதுகோல் அல்ல .
உன் வாழ்க்கை கோல்(ள்)என்றார்)
நாம் மீண்டும் நிகழ்வுக்குள் போவோம்...
அன்றைய தினம் தினமலர் பேப்பரில்
நான்
பார்த்தீனியம் பற்றிய கட்டுரையும்
அதை தமிழக அரசு களை எடுக்க
திட்டம் போட்டிருப்பதையும்(ஆனால் அது இன்று வரை நடைபெறவில்லை)
படித்தேன்.
விருந்தினர் எங்களிடம் நிறைய
பேசிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருந்தார்.
இடையூறு
செய்ய எனக்கு விருப்பமில்லை.
உணவு இடைவேளை விடப்பட்டது.
நான் அவரிடம் இதை பற்றி பேசினேன்.
அவர் கூறினார்.
"இதை பற்றி எதுவும் அறியவில்லை
நான் பார்த்து சொல்கிறேன் என்றார்"
உணவு முடித்துவிட்டு எல்லோரும் வந்துவிட்டோம்.
விருந்தினர் அவர்கள்
ஆரம்பிக்கிறார்
காலையில் ஒரு மாணவி என்னிடம் வந்து
ஒன்றை வினவினார்.
நல்ல ஒரு கருத்தை முன்வைத்தார்.
அந்த மாணவியின் பெயர் தெரியவில்லை.
அவர்கள் எங்கிருந்தாலும்
எழுந்து நில்லுங்கள்.
உங்கள் பெயர் என்ன?
பிரபாவதி என்கிறேன்
(அரங்கமே கைதட்டுகிறது)
பிரபாவதி அவர்கள் கூறினார்கள்
பார்த்தீனியம் என்ற
செடியை களையெடுக்க தமிழக அரசு திட்டம் தீட்டுகிறார்கள்.
எல்லோரும் பாருங்கள்
இது தான் பார்த்தீனியம் என்று PPT காண்பிக்கிறார்.
இந்த செடிகளை எங்கு பார்த்தாலும் அழித்துவிடுங்கள் என்றார்.
அதற்கு அடுத்த நாட்களில் இருந்து
மாணவிகள் எல்லோரும் என்னிடம் வந்து அந்த செடி எப்படி இருக்கும்
எடுத்து வந்து காண்பியேன் என்றார்கள்.
நான் அவர்கள் எல்லோருக்கும்
ஒன்றாக காண்பித்து
இந்த செடியை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள் உங்கள் ஊர்களில்
மிகவும் சுலபமாக.
இதை வெறுங்கையால் தொட கூடாது.
உப்பு தண்ணீர் கரைசலை ஊற்றி
களை எடுக்க வேண்டும்.
இந்த செடிகள் நாட்டிற்கு வந்து சேர
வேறு நாடுகளின் சதிசெயல் தான் காரணம்.
இதுமட்டுமிலாமல்
வேலிகத்தானும் இதேபோல் தான் நம் நாட்டிற்குள் ஊடுருவியது
நமக்கு பயன் தரும் மரம் 1 லிட்டர் குடித்தால் இவை(வேலிகத்தான்)100 லிட்டர் குடிக்கும்.
இப்படியே போனால் நம் தாய் மண் மலடாகிவிடும் என்றேன்.
எங்களை வழிநடத்தி செல்லும் ஆசிரியர்கள் என்னை வாழ்த்தினார்கள்.
நாங்கள் அதற்கு அடுத்த நாட்களில் எங்கள் களையை ஆரம்பித்தோம்.
நான் கல்லூரி படித்தது விழுப்புரத்தில்
நீங்களே பார்த்திருப்பீர்கள் விழுப்புரத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வேலிகத்தான்கள்.
அங்கு மட்டுமில்லை திண்டிவனத்திலும் அதே நிலை தான்...
ஏன் தமிழகம் முழுவதும் இதே நிலை தான்.
தெரிந்தே நம் நாடு வற்றிகொண்டிருப்பதை பார்க்க
மனம் துடிக்கிறது
20 வருடங்களுக்கு முன்பு பார்த்த பசுமை இல்லை
ஏன்?
20 வருடங்களுக்கு முன்பு 20 அடியில் 50 அடியில் நீர் கிடைத்தது
இன்றோ
400 அடி 500 அடி 600 1000 என்று போயாயிற்று
ஆனாலும் பாறை தான் மிஞ்சுகிறது
அதற்கு யார் காரணம்?
நிறைய நோய்கள் புதிது புதிதாய் முளைக்கிறது
அதற்கு என்ன அர்த்தம்?
யாருடனும் சிரித்து பேசாமல்
ஒரு கூண்டு கிளிபோல் வாழ்கிறோம்
இன்றைய இளைய தலைமுறை
இனிவரும் தலைமுறை இழப்பது
கிராமத்து வாழ்க்கை
சுதந்திரமான காற்று
மண்வாசனை
வாசல் கோலம்
சாணம்
திண்ணை
தென்னந்தோப்பு
மூங்கில்காடு
சிறுவர்கள் புழுதி ஆட்டம்
கில்லி பம்பரம் பச்சகுதிர நொண்டி
ஐஸ்பால் கபடி பல்லாங்குழி கண்ணாமூச்சி
மாங்கா தோட்டம்
முந்திரி தோட்டம்
கோவில் திருவிழா
கடதெரு
பல்லிமிட்டாய்
கமர்கட்
நல்ல சமையல் எண்ணெய்
சுத்தமான காய்கறி அரிசி
பாட்டி வைத்தியம்
பச்சில மருந்து
இயற்கை அழகு
தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி மாமா அத்தை பெரியப்பா பெரியம்மா அவங்க பசங்க அவங்களோட பசங்க ....
இன்னும்....
சந்தோஷம்
நிம்மதி
......
இந்த பட்டியல் நீண்டுகிட்டே இருக்கும்
நாங்களே இத எல்லாத்தையும் இழக்கிறோம்
மனிதாபிமானமும் மனிதமும் கரைந்துபோகிறது
வாங்கள் மீண்டும் கிராமத்து வாழ்க்கைக்கே போய்விடுவோம்
வளர்ச்சி அவசியம் தான்
அதைவிட அத்தியாவசியம் அவசியம்
ஏன் இயற்கையோடு இயந்திரம் இணையக்கூடாதா!
இணையலாம்
வழிநடத்துவது இயற்கையாக இருக்கும் பட்சத்தில்
இயற்கையை காப்போம்
இயன்றதை செய்வோம்
இணையம் போல் இணைவோம்
மீண்டும் எங்கள் இயற்கை பூமியை மீட்டெடுப்போம்
மரம் நடுவோம்
அன்புதானம் அன்னதானம் இரத்ததானம் கண்தானம்
உடல் உறுப்பு தானம் செய்வோம்
~ பிரபாவதி வீரமுத்து
தலைப்பு :
இது யார் செய்த பிழை
எல்லோருக்கும் தெரியும்
அரசாங்கத்திற்கும் நம் மீதுஅக்கறையே இல்லை
நம் உணவிலாவது அக்கறை கொள்கிறார்களா
எதிலும் இல்லை
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம் தான்
கார்பரேட் மூளை
மிருகம் கூட திண்ணக்கூடாததெல்லாம்
எங்கள் உணவுகள்
நாமே நமை பார்த்துக்கொள்ள வேண்டியது தான்
முதலில் விவசாய நிலங்களை
மனைகளாக மாற்றாமல்
எல்லோரும் இயற்கை விவசாயிகளாய் மாறுவோம்
பணத்தை மறந்து
பாசத்தை ஏற்போம்
இரத்தம் சிந்தாத
நந்தவன உலகை நாம் பெறுவோம்
~ பிரபாவதி வீரமுத்து