ராகம் தந்த ராஜா
ராகதேவன் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பிறந்தா நாள் வாழ்த்துக்கள் ,
" வாழ்த்துப்பா"
வளையோசை
கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குடு குடு தென்றல்
ராகம் வீசுது..!!
இவரைபோல்
இன்னொரு இசையை
கேட்க நாமும்
எங்கே
யாரை தேடிபோவது ...!!!
பண்ணிசை இன்னிசை பேரிசை
திக்கெட்டும்
கேட்கட்டும்
இந்த ராஜா ராஜா இசை ...!!!.
நொடி நாளும் பொழுதும்
உந்தன் பாடல்
செவி கேட்காதோ என்ற தேடல் !!!.
நீ போட்ட பாடல்கள் நூறாகும்
அதை கேட்டால் தான்
மனமாகும் லேசாகும் ..!!
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு ..!!!
முன்னாலும் இந்நாளும் எந்நாளும்
எங்கேயும் எப்போதும்
ராஜா ராஜா தான்...!!